Tuesday, August 21, 2007


ஈழத்து மண்ணும் எங்கள் முகங்க்களும்
1986ல் எழழுதப் பட்ட ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் 1987ல் சென்னையில் காந்தளகத்தால் வெளியிடப் பட்டது.இக் குறுங் காவியம் 1987 - 2003 வரை சென்னைப் பல்கலைக் களகத்தில் எம் பில் தமிழ் இலக்கிய பாட நூலாக அமைந்தது.எனது முதன்மைப் படைப்பான இந்த கவிதை நாவல் பற்றிய கருத்துக்களளை வரவேற்கிறேன்.http://noolaham.net/library/books/03/278/278.pdf
Posted by ஜெயபாலன் at 4:35 PM 0 comments

காட்டுப் பூவின் பாடல்
ஒரு கதை கேள் தோழி.ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிறரோமியோக்களின் கதை கேள்.காகிதப் பூக்களின் நகரத்தில்காதலில் கசிந்துதேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி.என் இனிய பட்டாம் பூச்சியேசுவர்க் காடுகளுள் தேடாதே.நான் வனத்தின் சிரிப்புவழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும்வானவில் குஞ்செனப் பாடியதுபிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ.ராணித் தேனீக்களே எட்டாதகோபுரப் பாறைகளில் இருந்துகம கமவென இறங்கியதுஅதன் நூலேணி.வாசனையில் தொற்றிவந்தவண்ணத்துப் பூச்சியிடம்இனிவரும் வசந்தங்களிலும்தேனுக்கு வா என்றது பூ.காதல் பூவே வசந்தங்கள்தோறும்ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிறபட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில்உலகம் தழைத்தது.நிலைப்ப தொன்றில்லா வாழ்வில்கடக்கையில் பெய்கிற முகிலே உறவுகள்.
Posted by ஜெயபாலன் at 4:24 PM 0 comments

உயிர்த்தேன்
உயிர்த்தேன்வ.ஐ.ச.ஜெயபாலன்காலப் பாலை நடுவினிலேவினோதங்கள் வற்றிஉயிர்ப் பம்பரம் ஓய்கையிலேவாழும் கனவாக என் முன்னேவளரும் சிறு நதியே.உன் தோழமையின் பெருக்கில்துயர்கள் கரையுதடிவாழத் துடிக்குதடி கண்ணம்மாஎன் வார்த்தைகள் காவியமாய்கூதிர் இருட் போர்வை உதறிகுவலயம் கண் விழிக்கபோதியோடு இலை உதிர்த்த இருப்பும்புன்னகைத்தே துளிர்க்கமனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன்மண்ணைப் புணருகின்றான்.மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மாமூச்சால் உயிர் மூட்டி.கடைசித் துளியும் நக்கிகாலி மதுக் கிண்ணம் உடைத்துஎன் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன்.நீ கள்நதியாக நின்றாய்.உயிர்த்தும் புத்துயிர்த்தும்இந்த உலகம் தொடர்வதெல்லாம்உன் பொற்கரம் பற்றியன்றோ .மாண்டவர் மீள்வதெல்லாம் பெண்ணே நின்மந்திரத் தொடுகையன்றோ .பெண்களே பூமியர்கள்ஆண்கள் நாம் பிற கோளால் வந்தவர்கள்உன்னைப் புரியாமல் கண்ணம்மாஇந்த உலகம் புரிவதில்லை
Posted by ஜெயபாலன் at 12:23 PM 0 comments

இன்றைய மது
இன்றைய மதுவ.ஐ.ச.ஜெயபாலன்உலகம்விதியின் கள்ளு மொந்தை.நிறைந்து வழிகிறது அதுமதுக் கிண்ணம் தாங்கியவர்களால்எப்போதும் நுரைத்தபடி.நேற்றிருந்தது வேறு.இங்கே நுரைபொங்குவதுபுதிய மது.அது இன்றைய நாயகனுக்கானது.நாளை கிண்ணம் நிறைகிறபோதுவேறு ஒருவன் காத்திருப்பான்.நிச்சயம் இல்லை நமக்குநாளைய மது அல்லது நாளை.எனக்காக இன்று சூரியனைஏற்றி வைத்தவனுக்கு நன்றி.அது என் கண் அசையும் திசைகளில்சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.மயக்கும் இரவுகளில்நிலாவுக்காகஓரம்போகிற சூரியனேஉன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.கள்ளு நிலா வெறிக்கின்றஇரவுகள்தோறும்ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமேகடவுளையும் பாம்பையும்.இதைத் தின்னாதே என்னவும்இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.காதலே எமது அறமாகவும்பசிகளே எமது வரங்களாகவும்குதூகலித்தோம்.எப்பவுமே வரப்பிரசாதங்கள்வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்உறவுகள் போலவும்நிகழ் தருணங்களின் சத்தியம்.நிலம் காய்ந்த பின்விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோபட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூடஅவனது வியர்வை முளைப்பதில்லை.போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.நனைந்த நிலத்தில்உழுகிறவனின் கவிதையை எழுதுகிறதுஏர்முனை.காலியான விதைப் பெட்டியில்காட்டுமலர்களோடு நிறைகிறதுகனவுகள்.
Posted by ஜெயபாலன் at 12:13 PM 0 comments

நட்போடு வாழ்தல்
நட்போடு வாழ்தல்வ.ஐ.ச.ஜெயபாலன்இன்னும் தொடுவானில் கையசைக்கும்மணக்கோலச் சூரியன்.கீழே படுக்கையில்பொறுமை இழந்த பூமிப் பெண்வெண்முல்லைப்பூ தூவியநீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள்.எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.என் இரு கண்களிவை என்ற துடுப்புகளைகரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும்.வழித்துணையை போற்றினும் புணரினும்எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.தோழிஉடன் இருக்கிற இன்பங்களும்பிரிகிற துன்பங்களும் அடுக்கியநினைவு நிகழ்வு நூலகம் அல்லவாநம் வாழ்வு.பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்துஆர்ப்பரித்த வானம்இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும்.என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமாநட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதாஅல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமாஇந்த மாரி இரவு.கண்சிந்தும் பிரிவுகளில்நிறைகிறது வாழ்வு.ஒவ்வொரு தோழ தோழியர் செல்கிறபோதும்காதலியர் வசைபாடி அகல்கையிலும்நாளை விடியாதென உடைந்தேன்.இனி முடிந்ததென்கிற போதெல்லாம்பிழைத்துக் கொள்கிறதுவெட்டுண்ட தாய் அடியில் புதிதாய் ஒருகுட்டிவாழை பூக்கிற உலகு.என் இன்றைய கனவுகளின் நாயகியோஎப்போதும் காதலில் நீந்துகின்ற மீன்.இன்னும் எத்தனை நாள் எத்தனை நாள்எனக்காக அந்த ஏந்திழையாள் யாழ் மீட்டும் ?தோழி உன் யாழிசையில்சந்தணமாய் எனது மொழி தேய்கிறது.கிடங்கில் திராட்சை மதுவாய்முதிர்கிறதென் கவி மனசு.எச்சில் ஒழுக வழி மறித்துமுத்தமிடும் துருவத்துப் பனிக் காற்றிலும்எரிகிறது என் ஆத்மா.கண்டங்களே அசைகிற உலகில்மனிதர்களிடையே நிலையானது எது ?எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்கரு கறுத்த மேகங்களின் கீழ்பஞ்சு விதைகளாய் மிதக்கும் மாவீரர் கனவுகள்போலஉயிர்தெழுமெம் வாழ்வு.-2005. May
Posted by ஜெயபாலன் at 11:54 AM 0 comments
Saturday, August 18, 2007

என் கதை
அவள் தனி வனமான ஆலமரம்.நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.என்னை முதன் முதற் கண்டபோதுநீலவானின் கீழே அலையும்கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.நானோ அவளைகீழே நகரும் பாலையில் தேங்கியபாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டிஜாடை காட்டினாள்.மறுநாள் அங்கிருந்தது என் கூடு.இப்படித்தான் தோழதோழியரேஎல்லாம் ஆரம்பமானது.தண்ணீரை மட்டுமே மறந்துபோய்ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்பாலை வழி நடந்த காதலர் நாம்.அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.சிறகுகளில் மிதக்கும் எனக்கோநிலைத்தல் இறப்பு.மண்ணுடன் அவள் எனைவேரால் இறுகக் கட்ட முனைந்தும்,நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.உண்மைதான் அவளைநொண்டியென்று விரக்தியில் வைதது.முதலில் அவள்தான் என்னைப் பார்த்துகண்ட மரம் குந்தி, ஓடுகாலிமிதக்கும் நரகல் என்றாள்.ஒரு வழியாக இறுதியின் இறுதியில்கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்சமரசமானோம்.மாய ஊறவின் கானல் யதார்த்தமும்வாழ்வின் உபாயங்களும்காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.நம் காதலாய் அரங்கேறியதோஉயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்என்றோ எழுதிய நாடகச் சுவடி.இப்போது தெளிந்தேன்.சந்திக்கும் போதெலாம்என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்."ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்."மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்"என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்என் கிளைகளில் அமர்ந்ததோநீ மட்டும்தான்."இப்படித்தான் தோழதோழியரேஒரு மரமும் பறவையும் காவியமானது.
Posted by ஜெயபாலன் at 10:00 AM 2 comments
Subscribe to: Posts (Atom)